December 24, 2016
நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் தமிழக தலைமை செயலராக இருந்த ராம மோகன ராவ் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேரில் ஆஜராக வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் ராம மோகன ராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த ராம மோகனராவ் வீடு, மகன் விவேக் வீடு, சித்தூரில் உள்ள சம்பந்தி பத்ரிநாராயணன் வீடு உள்பட 13 இடங்களில் வருமான வரித் துறையினர் 21 மற்றும் 22-ம் தேதி திடீர் ரெய்டு நடத்தினர்.
விடிய விடிய நடந்த இந்த சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கமும், புதிய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. சித்தூரில் உள்ள ராம மோகன ராவின் சம்பந்தி வீட்டிலும் பல கோடி பணமும், தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல், தலைமைச் செயலகத்தில் ராம மோகன ராவ் அலுவலகத்திலும், அவரது வீட்டிலும் இருந்து முக்கியமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், சி.டி.கள் உள்ளிட்டவற்றை வருமான வரி துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
ராம மோகன ராவின் நேர்முக உதவியாளர்களான சேகர், குமார் ஆகியோரிடம் அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விவேக்கையும் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வருமான வரித்துறை ராம மோகன ராவுக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி
Reviewed by மறத்தமிழன்
on
December 24, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.