Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

குளறுபடியான டிராபிக் சிக்னல் போல மோடி அரசு பெரும் குழப்பத்தில் உள்ளது ராகுல் காந்தி குற்றச்சாட்டு


ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் மோடி அரசு பெரும் குழப்பத்தில் உள்ளது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

கட்டுப்பாடு

பிரதமர் நரேந்திரமோடி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் மாதம் இறுதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதில் சில கட்டுப்பாடுகளை விதித்து ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஒருவர் தனது கணக்கில் டிசம்பர் 30-ந் தேதிக்குள் ஒரு முறை மட்டுமே ரூ.5 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்யலாம். அப்போது வங்கி அதிகாரிகள் அவர்களிடம் கேள்வி எழுப்புவார்கள் என்று ரிசர்வ் வங்கி நிபந்தனை விதித்தது. இதற்கு கடும் விமர்சனங்கள் வந்ததையடுத்து நேற்று இந்த நிபந்தனையை ரிசர்வ் வங்கி ரத்து செய்து உள்ளது.

குளறுபடியான சிக்னல்

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் விமர்சித்துள்ளார்.

‘குளறுபடியுடன் இருக்கும் டிராபிக் சிக்னல் ஒரே நேரத்தில் பல நிறங்களை காட்டுவதை போல மோடி அரசு ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் பெரும் குழப்பத்தில் உள்ளது’ என்று கூறியுள்ளார்.

மேலும், அவரது டுவிட்டர் பக்கத்தில், போக்குவரத்து சிக்னல் ஒன்று ஒரே நேரத்தில் அனைத்து நிறங்களையும் ஒளிரச்செய்யும் படம் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த படத்தின் கீழே, ‘ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னர் அரசின் உத்தரவுகள்’ என்ற பதிவையும் வெளியிட்டு உள்ளார்.

ரிசர்வ் வங்கி

இதேபோல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எதிர்பாராதவிதமாக ரிசர்வ் வங்கி தற்போது ரிவர்ஸ் வங்கியாக மாறி விட்டது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.