December 18, 2016
புதிய ராணுவத் தளபதியாக பிபின் ராவத் நியமனம்
நாட்டின் புதிய ராணுவத் தளபதியாக, துணைத் தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். விமானப்படைக்கு தளபதியாக பி.எஸ்.தனோவாவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போதைய ராணுவ தளபதி தல்பீர் சிங், விமானப்படை தளபதி அரூப் ராஹா ஆகியோரின் பதவிக்காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து, புதிய ராணுவ தளபதியாக துணைத் தளபதி பிபின் ராவத்தையும், விமானப்படை தளபதியாக பி.எஸ்.தனோவாவையும் நியமித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் புலனாய்வு பிரிவு புதிய தலைவராக ராஜீவ் ஜெயின், உளவுப்பிரிவு புதிய தலைவராக அனில் தாஸ்மனா ஆகியோரையும் மத்திய அரசு நியமித்துள்ளது.
இவர்கள் அனைவரும் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளதாகவும், இரண்டு ஆண்டுகள் இப்பதவிகளில் நீடிப்பர் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி மூப்பு அடிப்படையில், கிழக்கு மண்டல துணைத்தளபதி பிரவீன் பக்சி, அவருக்கு அடுத்தப்படியாக துணைத்தளபதி பி.எம்.ஹாரிஷ் ஆகியோர் உள்ள நிலையில், விதிகளுக்கு மாறாக, பிபின் ராவத், ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
புதிய ராணுவத் தளபதியாக பிபின் ராவத் நியமனம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 18, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.