Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

​கடுகு செடிகள் பூத்துக்குலுங்குவதால் மஞ்சல் நிற கம்பளம் போல் காட்சியளிக்கும் உதகை



உதகை அருகே மண் வளத்தை பாதுகாப்பதற்காக பயிரிடபட்டுள்ள கடுகு செடிகள் பூத்து மஞ்சல் நிற கம்பளம் போத்தியது போல காட்சியளிப்பது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறை பனி பொழிவு குறைவாக இருப்பதால், நிலத்தில் பயிரிடும் மலை காய்கறிகளை பல்வேறு நோய் கிருமிகள் தாக்கி வருகிறது.

இதனால் மலைகாய்கறி விளைச்சல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனை அடுத்து, மண் வளத்தை பாதுகாக்கவும், மண்ணில் உள்ள கிருமிகளை அழிக்க கடுகு செடிகளை பயிரிடும் புதிய யுக்தியை, நீலகிரி மாவட்ட விவசாயிகள் தற்போது மேற்கொண்டுள்ளனர்.

உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் சில விவசாயிகள் தங்களது நிலங்களில் கடுகு செடிகளை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். அச்செடிகள், பூத்து மஞ்சல் நிற கம்பளம் போர்த்தியது போல விவசாய நிலங்களில் காட்சியளிக்கின்றன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.