December 31, 2016
அரசியலுக்கு வாங்க.. தீபா வீட்டை முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள்! நல்ல முடிவை அறிவிப்பதாக தீபா உறுதி
திருவள்ளூர், பூவிருந்தவல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வந்து, தீபாவை அரசியலுக்கு வருமாறு அழைப்புவிடுத்து கோஷமிட்டனர்.
விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து அவருக்கு எதிரான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு, அழைக்க அவரது தி.நகர் வீட்டை முற்றுகையிட்டனர்.
விழுப்புரம், திருவள்ளூர், பூவிருந்தவல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வந்து, தீபாவை அரசியலுக்கு வருமாறு அழைப்புவிடுத்து கோஷமிட்டனர். தங்களால் இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு தாங்க முடியவில்லை என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அரசியலில் களமாட வேண்டும் என்று தீபாவிடம் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
அப்போது வெளியே வந்த தீபா, அதிமுகவினர் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். மற்றவர்களுடன் தக்க ஆலோசனை செய்துவிட்டு, விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என கூறி தொண்டர்களை அனுப்பி வைத்தார்.
அரசியலுக்கு வாங்க.. தீபா வீட்டை முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள்! நல்ல முடிவை அறிவிப்பதாக தீபா உறுதி
Reviewed by மறத்தமிழன்
on
December 31, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.