Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 14, 2016

ஜெ. அண்ணன் மகள் தீபாவை காணவில்லை- 'பெங்களூர்' சைலஜா மகள் அமிர்தா புதுகுண்டு



இந்த பஞ்சாயத்துக்கு நடுவே தற்போது தீபாவை காணவில்லை என்ற புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகாரை தெரிவித்திருப்பவர் பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா.

ஜெயலலிதாவின் தங்கை என அவ்வப்போது ஊடகங்களில் அடிபட்ட பெங்களூர் சைலஜாவின் மகள்தான் இந்த அமிர்தா. ஜெயலலிதாவின் பெற்றோர் ஜெயராமன் - சந்தியா தம்பதியினருக்கு பிறந்த கடைசி மகள்தாமே என்றும் தாயார் சந்தியார் தன்னை ஆர்ட் டைரக்டர் பி.தாமோதரப் பிள்ளையிடம் வளர்க்கக் கொடுத்துவிட்டார் என்றும் கூறி வந்தவர் சைலஜா. இவர் கடந்த ஆண்டு காலமாகிவிட்டார்.

இந்த சைலஜாவின் மகள் அமிர்தா 'பெங்களூர் மிர்ரர்' ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
தீபாவும் நானும் நீண்டகாலமாக தொடர்பில் இருந்து வருகிறோம். என்னுடைய பெரியம்மா ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அதிகமான தொடர்பில் இருந்து வருகிறோம்.

சசிகலா தொடர்பாக தீபா தம்முடைய கருத்துகளைத் தெரிவித்த நிலையில் நாங்கள் இருவரும் சந்தித்து இப்பிரச்சனையை கையிலெடுக்க முடிவு செய்திருந்தோம். இது தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னையில் உள்ள தம்முடைய வீட்டுக்கு வருமாறு தீபா அழைத்திருந்தார்.

தீபா அழைத்ததைத் தொடர்ந்து சென்னைக்கு நான் திங்கள்கிழமையன்று வந்தேன். ஆனால் தீபாவின் வீடு பூட்டப்பட்டுள்ளது. அவரது வீட்டு வேலையாட்களும் அங்கு இல்லை. அவரது செல்போனுக்கு திங்கள்கிழமை முதல் தொடர்பு கொண்டு வருகிறேன். ஆனால் அவரது போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறது.

சசிகலாவை விமர்சித்த நிலையில் தீபா எங்கிருக்கிறார் என தெரியாதது அச்சத்தை ஏற்படுத்துகிறது. தீபா பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அமிர்தா கூறியுள்ளார்.

இருப்பினும் தீபா தொடர்பான அமிர்தாவின் தகவல்கள் உறுதியானவையானதா என தெரியவில்லை. சென்னையை புயல் புரட்டிப் போட்ட நிலையில் 3 நாட்களாக தொலைத் தொடர்பு சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது; இதனால் தீபாவின் செல்போன் தொடர்பு கிடைக்காமல் போனதா என்பது குறித்தும் தெரியவில்லை.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.