Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

ஜனாதிபதியுடன் சசிகலா புஷ்பா திடீர் சந்திப்பு! ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வலியுறுத்தல்!


ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார் சசிகலா புஷ்பா. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கவும் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா நேரில் மனு அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா. மேலும் சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச்செயலராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெல்லியில் முகாமிட்டுள்ள சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தினார் சசிகலா.
இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்த சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மனு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்த உள்ளார் சசிகலா புஷ்பா.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.