December 20, 2016
ஜெயலலிதா சொத்து குறித்து வழக்கு போட்டவருக்கு ஒரு லட்சம் அபராதம் - ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஐதராபாத்தில் சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்துக்களை தெலுங்கானா அரசு ஏற்க வேண்டும் என்று ‘கரீப் கைடு’ என்ற அமைப்பின் தலைவி பார்கவி ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், “ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லாததால் ஐதராபாத்தில் உள்ள சொத்துக்களை அரசு ஏற்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பார்கவிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நீதிபதி கூறுகையில், “ஜெயலலிதாவுக்கு அண்ணன் மகள், மகன் இருக்கிறார்கள். நீங்கள் வாரிசு இல்லை என்று எப்படி வழக்கு தொடர்வீர்கள்? இதனால் உங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறேன்” என்று கூறி உத்தரவிட்டார்.
ஜெயலலிதா சொத்து குறித்து வழக்கு போட்டவருக்கு ஒரு லட்சம் அபராதம் - ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவு
Reviewed by மறத்தமிழன்
on
December 20, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.