December 15, 2016
துப்பட்டா கழுத்தை இறுக்கி மாணவி சாவு
கோவையை அடுத்த வடவள்ளி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆனந்த். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவகாமசுந்தரி. இவர்களது ஒரே மகள் அக்ஷயா (12). 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் சைக்கிளில் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்றார். அங்கு ஊஞ்சல் மற்றும் சறுக்கில் ஏறி விளையாடி கொண்டிருந்தார்.
உயரமான சறுக்கில் ஏறி அக்ஷயா விளையாடியபோது அவரது துப்பட்டா, சறுக்கு கம்பிக்கு இடையே மாட்டி கொண்டது. அவர் வேகமாக கீழே சறுக்கிய போது நிலைதடுமாறி தொங்கினார். துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் சத்தம் கூட போட முடியாத நிலையில் உயிருக்கு போராடினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.
துப்பட்டா கழுத்தை இறுக்கி மாணவி சாவு
Reviewed by மறத்தமிழன்
on
December 15, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.