Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 15, 2016

நடராஜனுக்கு போயஸ் கார்டனுக்குள் நுழைய சசிகலா தடை விதித்திருப்பது ஏன்? பரபரப்புத் தகவல்



சென்னை: ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லத்திற்குள் நுழைவதற்கு கணவர் நடராஜன், சொந்தங்களுக்கு இன்னமும் சசிகலா அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற சசிகலா தரப்பு வியூகம் வகுத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள், அதிமுக அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என கிட்டதட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர் ஆதரவு சசிகலாவுக்கு கிடைத்துவிட்டது. இருப்பினும் தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடராஜன் பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் சசிகலா மிகவும் எச்சரிக்கையாக உள்ளார்.
அதனால் தான் ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமே 'சிரித்தபடி' ஜெயலலிதா உடலை வளைத்துக் கொண்டது. அங்கும் கூட நடராஜன் ஒரு ஓரமாகத்தான் உட்கார வைக்கப்பட்டார்.

என்னதான் தம்மை இயக்குபவராக நடராஜன் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதை சசிகலா விரும்பவில்லையாம். இந்தநிலையில் நடராஜனை முன்னிலைப்படுத்தினால் மக்கள் ஆதரவு கிடைக்காது என உளவுத்துறை மூத்த அதிகாரிகள் சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகையால் நடராஜன் உள்பட அவருடைய குடும்பத்தினர் யாரையும் முன்னிலைப்படுத்த கூடாது என சசிகலா உத்தரவிட்டுள்ளார். இதனால் தான் ஜெய டிவி உட்பட மற்ற ஊடகங்கள் வி.கே.சசிகலா என முன்னிலைப்படுத்தியது. பின்னர் சின்னம்மா என சசிகலா மாற்றி அழைக்கப்பட்டார். நடராஜன் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே பேனர் மற்றும் போஸ்டர்களில் சின்னம்மா என பெயர் போட்டு அடிக்குமாறு ஆதரவாளர்களுக்கு சசிகலா ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.