பாரத பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8ம் தேதி ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அது தான் உங்களிடமுள்ள ரூ 500, 1000 நோட்டு செல்லாது என்றும் டிசம்பர் 31வரை உங்களிடம் உள்ள ரூ 500, 1000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகள் பெற்றுக்கொள்ளலாம் என்று.
இந்த அறிவிப்பு குறித்து மோடி தனது அமைச்சர்களுக்கு கூட முன் கூட்டி தெரியாது என கூறினார். இது குறித்து ஒரு அப்டேட் ரிப்போர்ட் உங்களுக்காக..
1. முகேஷ் அம்பானி தன் தொலை தொடர்பு நெட்ஒர்க் ஐ விரிவுபடுத்தும் விதமாக கடந்த 2 வருடமாக அனைத்து இடங்களிலும் optic fibre கேபிள்கள் பதிக்கப்பட்டது.
2. ஜூலை 5. டிஜிட்டல் இந்தியா என்று கொண்டாட்டம்.
3. செப். 4 jio சிம் விற்பனை துவக்கம். அதற்கு விளம்பர Ambassador ஆக, அதன் விளம்பரங்கள் அனைத்திலும் மோடியின் படம்.
4. செப். 6 relaince ல் பணிபுரிந்த ஊர்ஜித் பட்டேல் RBI GOVERNOR ஆக அறிவிப்பு…
5. NOV 8. RS.500,1000ம் முடக்கம்
6. NOV 15. கூட்டுறவு சங்கங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யமாட்டோம் என்று சொன்ன RBI, ரிலையன்ஸ் குளுமத்தின் BIG BAZAR ல் DEBIT/CREDIT கார்டு ஸ்வைப் செய்து RS.2000 பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு.
7. NOV. 25: கள்ளப்பணம் கருப்புபணத்துக்கு என்று கூறப்பட்டது. அப்படியே டிஜிட்டல் கேஷ் என்று விளம்பரம்…
8. DEC 1.. முகேஷ் அம்பானி JIO சிம் இலவசங்களை 2017 மார்ச் 31 வரை நீட்டிப்பு.. மற்றும் JIO MONEY MERCHANT APP. என்கிற புதிய APP அறிமுகம்…( இதன் மூலம் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் மொபைல் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம்…) இவற்றை அறிவித்து விட்டு முகேஷ் அம்பானி மோடியின் 500, 1000 ஓழிப்புக்கு புகழாரம் சூட்டி, JIO சிம் அடுத்த கட்ட பரிமாணத்தை எடுத்து சென்றது..
இப்பொழுது கொஞ்சம் யோசித்து ஒப்பிட்டு பாருங்கள் மோடியின் செயலையும், அதற்க்கு ஏற்றார் போல் பின் வரும் முகேஷ் அம்பானியின் செயலையும்.
இப்பொழுதும் உங்களுக்கு இந்த பணப்புழக்க தட்டுப்பாடு யாருக்காக உருவாக்கப்பட்டது என்பது புரியவில்லையா.
கடந்த 3 மாதத்திற்கு முன் நடந்த ஸ்பெக்ட்ரம்(2G,3G4G) ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட பணம் 14.5 லட்சம் கோடிகள்.
அதில் 4G க்கு மட்டும் எதிர் பார்க்கப்பட்டது 11 லட்சம் கோடிகள். ஆனால் கிடைக்க பெற்றது வெறும். 65,870 கோடிகள் மட்டுமே,
இதற்கு சொன்ன காரணம் யாரும் ஏலத்தில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பது.
அதே 2009ல் அப்போதைய தொலைத் தொடர்பு மந்திரி ஆ. ராசா வால் 3G ஏலத்தில் 2.75 லட்சம் கோடிக்கு ஏலம் விடப்பட்டு அன்றைய finance minister பிரணாப் முகர்ஜியிடம் சேர்க்கப்பட்டது.
அதற்கு பிறகு தான் CAG 2G யையும் ஏலத்தில் விட்டு இருந்தால் இதே போல் தொகை கிடைத்திற்கும் என்று சொல்ல , அன்றைய எதிர் கட்சிகள், ஊடகங்கள் எல்லாம் மாபெரும் ஊழல் என்று போர்க்கொடி தூக்கின.
அதன் பிறகு நடைபெற்ற எந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்திலும், ராசாவால் கொண்டு வரப்பட்ட தொகையை விட குறைவாகவே கிடைத்திருக்கிறது,
இப்பொழுது கடைசியாக நடந்த 4G ஏலம் ( 2G.3ஜி யை விட சிறந்தது… மிகுந்த தொழில் நுட்பம் கொண்டது தான் 4G)11லட்சம் கோடிகள் கொடுத்திருக்க வேண்டியது, வெறும் 65,870 கோடிகள் மட்டுமே திரட்டியது.
மீதம் உள்ள 10.34 லட்சம் கோடிகள் பின் வாசல் வழியாக சென்றதை இந்த அரசாங்கமும், ஊடகங்களும் அப்படியே மறைத்து விட்டது.
இன்றைய நிலைமையில் அனைத்து தரப்பு மக்களும் இன்டர்நெட் பயன் பாட்டிற்குள் வரவேண்டிய கட்டாய நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி கொண்டு வர,
இன்னொரு பக்கம் முகேஷ் அம்பானி ஒட்டு மொத்த தொலைத்தொடர்பு வட்டத்தையும் தனதாக்கி கொள்ளும் வகையில் தனது JIO 4G சிம்மையும், அதன் இலவசங்களையும் வரும் 31.3.2017 வரை நீட்டிக்கிறார்.
அரசாங்கத்தால் இன்டர்நெட் கட்டயப்படுத்தப்பட்ட அனைத்து மக்களும் JIO வசம் தானாக போய் விழுவார்கள்.
அதில் உள்ள MERCHANT APPம் மக்களையும், வணிகர்களையும் JIO SIM பக்கம் சாய்க்கும்.
இப்படி அனைத்து மக்களையும் JIO SIM பக்கம் திருப்பி தொலை தொடர்பு துறையில் MONOPOLY யாக முகேஷ் அம்பானி வலம் வருவார்.
ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களில் MONOPOLY யாக இருக்கும் முகேஷ் அம்பானி இனி சில்லறை வணிக துறையிலும், தொலை தொடர்பு துறையிலும் மற்றும் மறைமுகமாக வங்கி துறையிலும். MONOPOLYயாக வலம் வருவார். வளம் பெறுவார். மோடியால் Monopoly யாக மாறுபவர்களும் அதன் துறைகளும்:
1. பெட்ரோலிய பொருட்கள் – Relience
2. சில்லறை வணிகம் – Relience
3. தொலை தொடர்பும் மற்றும் அதன் சாதனங்களும் – Relience
4. NATURAL POWER SOURCE- அதானி குழுமம்
5. மோட்டார் மற்றும் விவசாயம் – TATA – பில் கேட்ஸ் குழுமம்
6. கட்டமைப்பு துறை – பிர்லா வசம்
(மேற்கூறிய 4 குழுமத்துடன் அனைத்து வெளிநாட்டு கருப்பு corporate குழுமங்களும் இணைந்து உள்ளன.. )
இப்பொழுது சொல்லுங்கள் இந்த மோசடி அரசாங்கம் யாருக்காக வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் ?
இவர்கள் எப்படி காய் நகர்த்துகிறார்கள் என்பது உங்களுக்கு புரியவில்லையா .


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.