Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

சசிகலாவை புகழ்ந்து தள்ளும் பாண்டே: மறைந்திருக்கும் மர்மம் என்ன?


 
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தந்தித் தொலைக்காட்சியை பார்ப்பவர்களின் காதுகளில் ரத்தம் வருகிறதாம். காரணம் அந்த தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக இருக்கும் பீகாரின் மைந்தன் ரங்கராஜ் பாண்டே சசிகலாவுக்காக அடிக்கும் ஜால்ரா சத்தம் தான்.
# 1989 -ஆம் ஆண்டு தேர்தல் முதல் ஜெயலலிதாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் சசிகலா தான்.
# சசிகலாவால் மட்டும் தான் அதிமுகவை கட்டுப்கோப்பாக நடத்திச் செல்ல முடியும்.
# சசிகலா நல்லவர்… ஜெயலலிதாவுடன் இருந்ததால் தான் அவர் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேர்ந்தது.
-இப்படியாக சசிகலாவை புகழ்ந்து ஜால்ரா அடித்துக் கொண்டே இருக்கிறார். அதுமட்டுமின்றி, சசிகலாவை எதிர்ப்பவர்களை மட்டம் தட்டும் வகையில் பொய்யான பிரச்சாரங்களையும் செய்து வருகிறார்.
இதற்கெல்லாம் காரணம் வெறும் பணமும், வெளியில் சொல்ல முடியாத சில சலுகைகளும் தான் என்று நினைத்தால் நீங்கள் ஒரு அப்பாவி.
ஆட்சித் தலைமையையும், அதிமுக தலைமையையும் ஒருசேர கைப்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் வளைத்துப் போட்டிருக்கும் ஊடகவியலாளர்களில் முக்கியமானவர்கள் தந்தி தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டேவும், புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வனும் முதன்மையானவர்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த 4-ஆம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், நடந்த உண்மை வேறு. அந்த உண்மையை மறைத்து செய்திகள் வர வேண்டும் என்பதற்காக அன்று நள்ளிரவில் பாண்டேவும், கார்த்திகைச் செல்வனும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டுள்ளது என்று தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர். அதன்படியே இருவரும் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 5-ஆம் தேதி மாலை ஜெயலலிதா இறந்து விட்டதாக தந்தி தொலைக்காட்சியில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டது கூட, அப்படி ஒரு செய்தி வெளியானால் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்டது தானாம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.