Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 19, 2016

இந்திரா காந்தி குறித்த பிரதமரின் கருத்துக்கு கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.



உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என அறிவிக்க பிரதமராக இருந்த இந்திரா காந்தி மறுத்ததால் நாட்டிற்கு பேரிழப்பு ஏற்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, நரேந்திர மோடியின் இந்த கூற்றை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஏற்க 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்தி மறுத்தாலும், 1978ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் நிறைவேற்றியதை உத்தவ் தாக்கரே சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை செல்லாது என மொரார்ஜி தேசாய் அறிவித்தபோதிலும், நாட்டின் பொருளாதாரம் புதிய உச்சத்தை எட்டாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பழைய ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என அறிவித்துள்ளதால், தீவிரவாத தாக்குதல்கள் முடிவுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய உத்தவ் தாக்கரே, ஆனால், எல்லையில் இன்னமும் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது என கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.