Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 16, 2016

‘‘விசாரணை பிடியில் அப்போலோ’’..?? அச்சத்தில் ரெட்டி..!?



மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பல்வேறு வதந்திகளும், உண்மைச் சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அதற்கேற்றது போல, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதித்தது முதல் அவரின் உடல் போயஸ் தோட்டத்திற்கு எடுத்துச்சென்றது வரை நடந்த சம்பவங்கள் உண்மையா என்ற கேள்வியை எழுப்பும் நிலையில் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பிய வண்ணம் உள்ளது.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனையின் 2வது மாடியிலுள்ள 2007 முதல் 2012 வரையிலான அறைகளின் வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக சென்னையைச் சேர்ந்தவர்கள் சில பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிகிச்சை குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுப்பும் படங்கள் வெளியாதன் அடிப்படையில், சென்னை அப்போலோ மருத்துவமனை விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில், ‘‘விசாரணை பிடியில் அப்போலோ மருத்துவமனை’’ என்ற போஸ்டர் சென்னையில் வலம்வருவதாக தற்போது போஸ்டர் ஒன்று பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியும் லைக் செய்துள்ளார்.

இந்த போஸ்டர் மற்றும் வழக்கு விசாரணைக்கு வருவது குறித்தும்  அப்போலோ மருத்துவமனையின் தலைவர் ரெட்டி  மிகுந்த அச்சத்திலும், பீதியிலும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.