Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

‘நன்றி மறந்து விட்டார் அஷ்வின்’ : டோனி ரசிகர்கள் கொந்தளிப்பு


ஐசிசியின் இரட்டை விருது வென்ற இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் நன்றி மறந்து விட்டதாக டோனி  ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர். இந்தாண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் அணி வீரர் என சர்வதேச  கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) இரட்டை விருதுகளை அஷ்வின் வென்றார். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுகள்  குவிந்தன. ஆனாலும், கேப்டன் டோனி ரசிகர்கள் சிலர் மட்டும் அஷ்வின் மீது கடுப்பில் உள்ளனர்.

அதற்கு காரணம், அஷ்வின் தன்னை வளர்த்து விட்ட டோனிக்கு நன்றி சொல்லவில்லை என்பதுதானாம். விருது வென்றது குறித்து அஷ்வின்  அளித்த பேட்டியில், ‘இந்த விருதை எனது குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கிறேன். ஐசிசிக்கும், குறிப்பாக எனது சக வீரர்களுக்கும் நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிக்க  விரும்புகிறேன். டோனி ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட வெற்றிடங்களை தாண்டி இளம் கேப்டனான கோஹ்லி தலைமையில் வலுவான  அணியாக உருவெடுத்துள்ளோம். இந்திய அணி இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது’ என்றார்.

இதுதான் டோனி ரசிகர்களின் கோபம். கேப்டனாக டோனியின் தலைமையின் கீழ்தான் அஷ்வின் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் கூட  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி தலைமையின் கீழ் தான் அஷ்வின் விளையாடினார். அஷ்வினுக்கு டோனி அதிகளவில்  ஆதரவளித்தாக கூறும் ரசிகர்கள், அஷ்வின் தன்னை வளர்த்து விட்ட டோனியை பெருமைப்படுத்தும் வகையில் ஒருவார்த்தை கூட  கூறவில்லையே என சோகமாகி உள்ளனர்.

இது தொடர்பாக டிவிட்டரில், ‘பழச நினைச்சு பாருங்க’, ‘உங்கள் வெற்றிப்பாதையில் டோனியின் பங்களிப்பை மறந்து விட்டீர்களா’,  ‘உங்களிடமிருந்து இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை’ என டோனி ரசிகர்கள் மட்டுமின்றி, அஷ்வின் ரசிகர்கள் என கூறிக் கொள்ளும்  சிலரும் கூட டிவிட்டரில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி நேற்று மன் கி பாத் வானொலி உரையில்,  ‘இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில்  வென்று அசத்தியிருக்கிறது. இதில், முச்சதம் அடித்த கருண் நாயர், 199 ரன் எடுத்த கே.எல்.ராகுல் போன்ற இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக  செயல்பட்டது பாராட்டுக்குரியது. கேப்டன் கோஹ்லி பேட்டிங்கும் அவரது தலைமைப்பண்பும் அபாரம்.

ஐசிசியின் இரட்டை விருது வென்று அஷ்வின் பெருமைப்படுத்தி உள்ளார். இந்திய அணி வீரர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுகளை  தெரிவிக்கிறேன். 15 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஹாக்கில் நற்செய்தி கிடைத்திருக்கிறது. நமது ஜூனியர் அணி உலக கோப்பை வென்று  சாதித்திருக்கிறது. அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்’ என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.