ஜப்பானின் முன்னணி விளம்பர நிறுவனம் டென்சு (Dentsu). இந்த விளம்பர நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்குச் சேர்ந்தார் மட்சுரி டகயாஷி (Matsuri Takahashi), 24. டகயாஷி வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து ஒவ்வொரு மாதமும் 100 மணி நேரங்களுக்கும் மேலாக ஓவர் டைம் வேலை செய்துள்ளார். அவர் சரியாக சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று, டென்சு நிறுவனத்தின் கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்புக்கு காரணமாக கூறப்படுவது, ஓவர்டைம் வேலை செய்ததுதான் என்று ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன.
அவர் இறந்து ஒரு ஆண்டு முடிவடையும் நிலையில் அந்த நிறுவனத்தின் தலைவர் டடாஷி இஷி (Tadashi Ishii), டகயாஷியின் இறப்புக்கு பொறுப்பேற்று, தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
'டகயாஷியின் இறப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரின் இறப்புக்கு முழுப் பொறுப்பேற்று எனது பதவியை வரும் ஜனவரி மாதம் ராஜினாமா செய்யப் போகிறேன்' என்று கூறியுள்ளார் டடாஷி.
அவர் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னர்தான், ஜப்பானின் லேபர் பீரோ, டகயாஷி மரணம் குறித்து டென்சு நிறுவனத்தை விசாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.