மார்ச் 31, 2016 கணக்கின்படி மத்திய அமைச்சர்கள் கையில் வைத்துள்ள ரொக்கம் குறித்த விவரம் அடங்கிய பட்டியல் கிடைத்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அவரிடம் ரூ.65 லட்சம் ரொக்கம் உள்ளது.
ஒருபுறம் சாமானிய மக்கள் பணமின்றி தத்தளித்து வருகின்றனர், மறுபுறம் கிராமவாசிகளிடம் சென்று பிரதமரும், அருண் ஜேட்லியும் இ-வேலட், ஆன் லைன் வர்த்தகம், ரொக்கமற்ற சமுதாயத்தை நோக்கி முன்னேறுவோம் என்று அறைகூவல் விடும் நிலையில், அருண் ஜேட்லி உட்பட அமைச்சர்கள் கையில் பெரிய அளவில் ரொக்கமுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) பெற்ற காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் தகவல்களின்படி, தற்போது பதவியில் இருக்கும் 76 அமைச்சர்களில் 40 பேர்தான் தங்களிடம் உள்ள ரொக்கப்பணம் எவ்வளவு என்பதை வெளியிட்டுள்ளனர்.
ரூ.500, ரூ.1000 நடவடிக்கையினால் நாட்டில் மக்கள் 22 நாட்களாக வங்கிக்கு நடையாக நடந்தும், நீண்ட வரிசையில் நின்றும் சோர்ந்ததுதான் மிச்சம்; கைக்கு பணம் கிடைப்பதில்லை. இந்த வரிசைகளில் தொழிலதிபர்களோ, கறுப்புப் பண முதலைகளோ, அமைச்சர்களோ, அரசியல்வாதிகளோ நிற்கவில்லை, இந்நிலையில் மார்ச் 31, 2016 கணக்கின்படி அமைச்சர்கள் கையில் வைத்துள்ள ரொக்க விவரம் கிடைத்துள்ளது.
ரூ.500, ரூ.1000 நடவடிக்கை குறித்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அவரிடம் ரூ.65 லட்சம் ரொக்கம் உள்ளது.
மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் எசோ நாயக் (சுயேச்சை) ரூ.22 லட்சம் ரொக்கமும், மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாகவும் வைத்திருக்க, பிரதமர் மோடி தன்னிடம் ரூ.89,700 ரொக்கம் இருப்பதாக அறிவித்ததும் கவனிக்கத்தக்கது.
23 அமைச்சர்கள் தங்களிடம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக ரொக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 15 அமைச்சர்களிடம் 2.5 லட்சத்துக்கு மேல் ரொக்கம் உள்ளது.
மற்ற உயர்மட்ட அமைச்சர்களில் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோர் இன்னமும் தங்கள் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அளிக்கவில்லை.
இந்தத் தரவுகள் அறிவிப்பது என்னவெனில் ரொக்கமற்ற சமுதாயம் சமைப்போம் என்ற பிரதமரின் உற்சாகத்தை அமைச்சர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதையே.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.