Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 3, 2016

வந்துவிட்டது ஸ்மார்ட் ஆப்பிள் கண்ணாடி...! அப்படி இதுல என்ன இருக்கு..?


ஸ்மார்ட்போனை ஆக்கிரமித்து வந்த ஆப்பிள் தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள் எனும் தொழிநுட்ப கண்ணாடியை களமிறக்கியுள்ளது. அப்படி என்ன தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில்.? தற்போது தொழில்நுட்ப யுகத்தை ஆளும் ஆண்ட்ராய்டு தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணாடியை நம் முகம் பார்க்க பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஸ்மார்ட் கண்ணாடி நேரம், வானிலை போன்ற அனைத்து நிகழ்வுகளையும் அறியும் வகையில் மினி கம்ப்யூட்டராக செயல்படுகிறது. இதில் ‘இன்டர்ஃபேஸ்’ எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ரபேல் டைமெக் என்பவர் உருவாக்கியுள்ளார்.

நம் கம்ப்யூட்டரில் இருப்பது போலவே ஐகான்கள் கண்ணாடியின் வல மற்றும் இடப்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஐ.ஒ.எஸ், ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தொடுத்திரையின் மூலம் இதனை பயன்படுத்த முடிகிறது. இதன்மூலம் ஐகான்களை க்ளிக் செய்து மெசேஜ் படிப்பது, படம் பார்ப்பது, நியூஸ் பார்ப்பது, வீடியோ காலிங் போன்ற அனைத்து பயன்பாடுகளையும் உபயோகப்படுத்த முடிகிறது. ஆப்பிள் ஐ.ஒ.எஸ் 10 ல் பயன்படுத்தப்பட்ட மென்பொருள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரபேல் கூறுகிறார்.

நம் செல்போன் லாக் ஆவதை போன்று இந்த ஸ்மார்ட் கண்ணாடியும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு லாக் ஆகி விடும். லாக் ஆகி விட்டால் ஸ்மார்ட் கண்ணாடி நார்மல் கண்ணாடி போல மாறிவிடும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.