Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 5, 2016

அப்போலோ ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு!


ஊழியர்களை அவசரம் அவசரமாக வீட்டுக்குப் புறப்படச் சொல்லி உத்தரவிட்டுள்ளது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, 73-வது நாள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, முதல்வர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனை செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டியும் இதனை உறுதி செய்தார்.

இந்த நிலையில், ஊழியர்களை வீட்டுக்குச் செல்லுமாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் திடீரென அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள் மற்றும் இதர ஊழியர்கள் அவசரம் அவசரமாக வீ்ட்டுக்குப் புறப்பட்டு செல்கின்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.