மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னை வருகிறார்கள். அதில், சிலர் நேராக போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து வணக்கம் வைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். நேரில் செல்பவர்களிடம் ஏதாவது பேசுவார், கேட்பார் என நம்பிக்கையில் செல்லும் தொண்டர்களிடம், சசிகலா சைகையிலேயே ஆமோதித்து 'வணக்கம்' வைப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்.
தற்போது வலம் ஒரு வீடியோவில் சசிகலா தொண்டர்களைச் சந்திக்கும் காட்சி இருக்கிறது. தன் முன் நிற்கும் தொண்டர்கள் சொல்வதைக் கேட்டபடி அங்கும் இங்கும் நடக்கிறார். யாரிடமும் ஒரு வார்த்தை கூட அவர் பேசுவதில்லை. அமைதியாக தலையை ஆட்டி ஆமோதித்தபடி, கைகூப்பியபடி செல்கிறார். ஆனால், எவரிடமும் நிறுத்தி நிதானமாக உரையாடக் காணோம். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஆகலாம் என தகவல்கள் உலவும் வேளையில், அக்கட்சியின் தொண்டர்கள் சசிகலாவின் குரலைக் கேட்டிருப்பார்களா என்பதே சந்தேகம்தான்..!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.