Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 11, 2016

ஜெயலலிதா இறப்பு செய்தி கேட்டு இறந்தவர்கள் எத்தனை பேர்?


நீண்ட நாட்களாக அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி அன்று அப்போலோவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதையடுத்து  6 டிசம்பர்’16 அன்று அவரது பூத உடல் சென்னை கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதி அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைந்த அதிர்ச்சி தாளாமல் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 470 என கணக்கிடப்பட்டுள்ளது என அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணமாக ஆளும் அதிமுக நிர்வாகம் தலா 3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. ஜெ. இறந்த செய்தி அறிந்ததும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த தொண்டருக்கும், தன் விரல்களை வெட்டிக் கொண்ட ஒருவருக்கும் கழகம் தலா 50,000 நிதியுதவி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



கடந்த 22செப்டம்பர்’16 அன்று வெறும் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடுக்காக மட்டுமே அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதையடுத்து நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான தீவிர பிரச்னைகளுக்காக அங்கே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி ஜெ.வுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து எக்மோ உள்ளிட்ட உயரதர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது என அப்போலோ நிர்வாகமும், லண்டன் டாக்டர் ரிச்சர்டும் அறிக்கைகளை வெளியிட்டனர். அதைக் கேட்டு இதுவரை 203 பேர் இறந்துவிட்டதாக கடந்த சனிக்கிழமை அன்று அதிமுக கட்சி நிர்வாகம் கூறி இருந்தது. இந்நிலையில் அது 470 ஆக உயர்ந்துள்ளதாக இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் 77 பேர் அவர் இறந்த அதிர்ச்சி தாளாமல் செய்தி கேட்ட இடத்திலேயே உயிரிழந்தவர்கள். இறந்தவர்கள் அனைவருமே சென்னை, வேலூர், திருவண்ணாமலை,திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

தொண்டர்கள் உயிரிழப்பு அதிமுகவில் தொடரும் சோகம்

தலைவர் இறப்புக்காக தொண்டர்கள் இறப்பது காலம்காலமாக அதிமுகவில் நிகழ்ந்துவரும் சோகம் எனலாம்.

1987ம் வருடம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் உயிரிழந்ததை அடுத்து அந்த அதிர்ச்சி செய்தி தாளாமல் 100 பேர் வரை தற்கொலைக்கு முயன்றனர், 30 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்தனர். அவரது இறுதி ஊர்வலத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்தனர். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2014ல் கைது செய்யப்பட்டபோது கட்சித் தொண்டர்கள் 41பேர் தற்கொலை செய்துகொண்டனர்,மொத்தம் 113 பேர் உயிரிழந்தனர். இப்படித் தொடரும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த கட்சியை அடுத்து வழிநடத்துபவரை முடிவு செய்யும் முன் தொண்டர்களின் பாதுகாப்புக்கும் ஏதேனும் வழிவகை செய்யுமா கழகத்தின் முன்னணிகள்?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.