Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 11, 2016

‘வர்தா’ புயல் சென்னையை நெருங்கியது நாளை ஒருநாள் மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்


வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல்  சென்னை அருகே வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு மற்றும்  வடகிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. நெல்லூரில் இருந்து 490 கிலோ மீட்டர் தொலை விலும், மசூலிப் பட்டினத்தில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த புயல் வடக்கு தமிழ்நாடு-தெற்கு ஆந்திரா இடையே சென்னை அருகே நாளை பிற்பகல் கரையை கடக்கிறது.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வர்தா புயலால் 100 கி.மீ வேகத்தில் சென்னையில் காற்று வீசக்கூடும். கடந்த 1994-ல் சென்னையில் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
நாளை ஒருநாள் மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வார்த் புயல் நாளை சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் மீனவர்கள் அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.