Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 3, 2016

சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கு வைத்து இருப்பவர்கள் விவரங்கள் வெளியாகிறது


உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரகசியமாக பதுக்கி வருகின்றனர். அந்தவகையில் ஏராளமான இந்தியர்களும் இந்த வங்கிகளில் பெருமளவில் பணம் போட்டு உள்ளனர்.இந்த கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுவிட்சர்லாந்து உள்பட வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்பதற்காக சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் படி சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றும் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் வெளிநாட்டினர் பதுக்கியுள்ள பணம் தொடர்பான தகவல்களை அந்தந்த நாட்டு அரசாங்கத்திடம் பகிர்ந்து  கொள்ள முடிவு செய்துள்ளதாக சுவிஸ் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்து சட்டத்திற்கு விரோதமாக சேமித்த பணத்தை சுவிஸ் வங்கியில் திருட்டுத் தனமாக பதுக்கி வருவதால் பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி கொண்டிருகின்றன.

மேலும், இதுபோன்று முறைகேடாக பணம் பதுக்கியுள்ளவர் பற்றிய தகவல்களை சுவிஸ் அரசு வெளியிட மறுத்து வந்ததால் அந்நாட்டு அரசு கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வந்தது.

இதனால், சுவிஸ் வங்கியில் உள்ள ரகசிய கணக்குகள் குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்ள தயார் என்று சுவிஸ் அரசு தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சுவிஸ் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரகசிய தகவல்களை பகிர்ந்துக்கொள்ளும் ஏஇஓஐ-ன் விதிமுறைகளின் அடிப்படையில் இந்தியா, அர்ஜெண்டினா, பிரேசில், உருகுவே, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 22 நாடுகளுடன் ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பான செயல் திட்டங்கள் வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என்றும், இதற்கு ஓராண்டிற்கு பிறகு ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்திடமும் ரகசிய கணக்குகள் தொடர்பான தகவல்கள் பகிர்ந்துக்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல வருடங்களாக சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கணக்குகள் குறித்த மர்மம் விலக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.