திருவொற்றியூர்,
திருவொற்றியூர் தாங்கல் தியாகராயபுரத்தில், சசிகலா வழி நடப்போம் என்று கூறி சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க. மகளிர் அணியினர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த பேனரை உடனடியாக அகற்றக்கோரி 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், பேனரை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் அந்த பேனர் உரிய அனுமதி இன்றி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி உதவியுடன் அந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.