Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 5, 2016

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு செய்யப்பட்ட சிறு அறுவை சிகிச்சை முடிந்தது இன்னும் 24 மணி நேரம் முதல்வரின் உடல்நிலை கண்காணிக்கப்படும்


அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 3 மணி வரை  ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. சிறு அறுவை சிகிச்சை சற்று முன் முடிந்தது.

முதல்வரின் உடலில் ஏற்படும் எதிர்வினையைப்பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யக்கூடியது ஆஞ்ஜியோ ஆகும். ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அறுவை சிகிச்சை எந்த அளவிற்கு பலன் அளித்திருக்கிறது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் 24 மணி நேரம் முதல்வரின் உடல்நிலை கண்காணிக்கப்படும். உடலில் ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றை சீராக்குவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடலில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு முடிந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.