Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 2, 2016

என் மகளையே காதலித்து இருப்பேன் டொனால்டு டிரம்ப்பும் சர்ச்சைகளும்


அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று உள்ள டொனால்டு டிரம்ப் பெண்களை அவமதிக்கும் வகையில் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்டு டிரம்ப் இஸ்லாமியர்களை மட்டும் குறி வைத்து விமர்சனம் செய்யவில்லை. தேர்தலில் போட்டியிட்டபோதும், அதற்கு முன்னதாகவும் பெண்கள் குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பல்வேறு தரப்பினரை பாதித்துள்ளது.

*   ஹேவ்லெட்பேக்ர்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கேர்லி புளோரினா  என்பவரை பற்றி டிரம்ப் பேசியபோது, ‘அந்த பெண்ணின் முகத்தை பாருங்கள். இந்த முகத்திற்கா நீங்கள் வாக்களிப்பீர்கள்? இந்த முகமா நமது அடுத்த ஜனாதிபதி?’ என அவருடைய உருவத்தோற்றத்தை அவமதித்து டிரம்ப் பேசியுள்ளார்.

* டிரம்ப் ஓரிணச்சேர்க்கையாளர்களுக்கு எதிரானவர் என்பதால் பாக்ஸ் நியூஸ்  செய்தியாளரான மெக்யன்கெல்லி என்பவர் நேரலை நிகழ்ச்சியில் டிரம்பிடம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

* இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மற்றொரு செய்தி நிறுவனத்தில் டிரம்ப் பேசியபோது, ‘அந்த நேரத்தில் மெக்யன்கெல்லி  மாதவிடாய் காலத்தில் இருந்துள்ளார். அதனால் தான் என்னிடம் கடுமையான கேள்விகளை கேட்டுள்ளார். அவருடைய மூக்கிலும் மற்ற உறுப்பிலும் ரத்தம் வந்ததை பார்த்தீர்களா?’ என தரக்குறைவாக பேசியுள்ளார்.

* அமெரிக்காவில் வெளியாகும் ஹப்பிங்டன் பத்திரிகை நிறுவனரான அரியான்னா என்பவரை பற்றி டிரம்ப் வார்த்தையில் கூறமுடியாத அளவிற்கு குரூரமாக பேசியுள்ளார்.
அரியானாவின்  உள்ளுறுப்புகளும் வெளி உறுப்புகளும் பார்க்க சகிக்கவில்லை. இவரை விட்டுவிட்டு மற்றொரு ஆண் மகனை தேடி அவரது கணவர் ஏன் சென்றார் என்பது எனக்கு இப்போது தான் நன்றாக புரிகிறது’ என பேசியுள்ளார்.

* அமெரிக்க ஜனாதிபதியாக ஹிலாரிக்கு தகுதி இல்லை. ஏனெனில், அவரது கணவரான பில் கிளிண்டனுக்கு நிறைய ரகசிய உறவுகள் இருந்துள்ளது. ஹிலாரி இதற்கு உடந்தையாக இருந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், தனது கணவர் மீது பாலியல் புகார் கூறும் பெண்களை ஹிலாரி படுமோசமாக தாக்கியுள்ளார்.

தொழில் சார்ந்த பல்வேறு கூட்டங்களில் டிரம்ப் பங்கேற்றபோது பெண்களின் அந்தரங்க உறுப்புகளை டிரம்ப் தொட்டு பேசியுள்ளார்.‘பொதுமக்கள் மத்தியில் நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தால், பெண்களை எங்கு வேண்டுமானாலும் தொடலாம்’ என அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

* ரோஸி மிகவும் காட்டுமிராண்டித்தனமானவர். கொடூரமானவர். ஒருவேளை, அவருடைய நிகழ்ச்சியை நான் நடித்தினால் அவருடைய அந்தரங்க உறுப்புகளை நேருக்கு நேராக பார்த்து ‘உனக்கு இனிமேல் வேலை கிடையாது’ எனக் கூறியிருப்பேன்.

* கடந்த 2006-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டிரம்பின் மகள் ஈவான்கா டிரம்ப் பற்றி பேசியபோது ‘எனது மகள் மிகவும் அழகும் கவர்ச்சியும் மிக்கவர். ஒருவேளை, ஈவான்கா என்னுடைய மகளாக இல்லாமல் இருந்திருந்தால், அவரையே நான் டேட்டிங் செய்திருப்பேன்...ஆனால், இப்போது நான் அவருடைய தந்தை’ என கூச்சமின்றி பதிலளித்துள்ளார்.

* தொழிலதிபரும், மொடலுமான பாரீஸ் கில்டன் பற்றி பேசியபோது பாரீஸ் கில்டனை  12 வயது முதல் எனக்கு தெரியும். இவருடைய பெற்றோரும் எனக்கு நல்ல பழக்கம். ஒருமுறை அவருடைய வீட்டிற்கு சென்றபோது பாரீஸ் ஹில்டன் ஒரு அறைக்குள் சென்றதை பார்த்தேன். ‘வாவ்.....யார் இந்த கவர்ச்சியான......அடடா, அவருடைய 12 வயதில் எனக்கு இந்த எண்ணம் வந்திருக்க கூடாது’ என உளறினார்.

* கடந்த 1991-ம் ஆண்டு பெண் செய்தியாளர்களை பற்றி பேசியபோது ‘என்னை பற்றி பத்திரிக்கைகளில் அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை. ஆனால், என்னை பேட்டி எடுக்கும்போது அவர்களுடைய உடலமைப்புகள் எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம்’ என பேசியுள்ளார்.

* நீதிமன்றத்தில் டிரம்ப் மீதான ஒரு வழக்கு விசாரணையின்போது எலிசபத் பெக் என்ற பெண் வழக்கறிஞர் ஒரு அவசர இடைவெளி வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், டிரம்ப் அதற்கு மறுத்துவிட்டார். தனது 3 வயது குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் எனக் கூறியபோதும் அனுமதி கிடைக்கவில்லை. இறுதியாக, நீதிமன்றத்திலேயே தனது மார்பகங்களை வெளியே எடுத்து ‘குழந்தைக்கு பால் கொடுக்க தான் அவகாசம் கேட்கிறேன்’ எனக் கூறிய பிறகு ‘நீ மிகவும் மோசமானவள்’ எனக் கண்டித்துவிட்டு டிரம்ப் அனுமதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.