Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

30–ந் தேதிக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்தால் அபராதம்?


செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலஅவகாசம் 30–ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது. அதன்பின்னர் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், நாளை மறுநாள்(புதன்கிழமை) நடைபெறும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் தலா 10 எண்ணிக்கைக்கு மேல் வைத்திருந்தால் ரூ.50 ஆயிரம் அல்லது வைத்திருக்கும் பணத்தின் மதிப்புக்கு 5 மடங்கு இதில் எது பெரிய தொகையோ அந்த அளவு அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது. செல்லாத நோட்டுகளை மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்வதற்கான காலஅவகாசமும் இருக்கிறது. அதற்கான காலம் குறைக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.