பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கடைசி நாளில் கூட்டம் அலைமோதியது.
500, 1,000 ரூபாய் நோட்டுகள்
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8–ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். பொதுமக்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றி வந்தனர். அதுவும் உச்சவரம்பாக தனிநபர் ஒருவருக்கு ரூ.4 ஆயிரம் வரை மட்டுமே மாற்றித் தரப்படும், ஆதார் அடையாள அட்டை அவசியம் என்பன உள்ளிட்ட பணம் எடுப்பதற்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அதிருப்திக்கு உள்ளானார்கள்.
பொதுமக்கள் கூட்டம்
நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பு பணத்தை மாற்றுவதற்கும், வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுப்பதற்கும் வங்கி வாசல்களில் காலையில் இருந்தே பொதுமக்கள் காத்துக் கிடந்தனர். மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தப்படி, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
பழைய ரூபாய் நோட்டுகளை ‘டெபாசிட்’ செய்ய கடைசி நாளான நேற்று வங்கிகளில் மக்கள் குவிந்தனர். சென்னையில் சில பகுதிகளில் உள்ள வங்கிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் ஒரு சில இடங்களில் வங்கிகளில் வழக்கமான வாடிக்கையாளர்களையே காணமுடிந்தது.
எதிர்பார்த்த அளவு இல்லை
உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மார்ச் மாதம் 31–ந்தேதி வரை மாற்றலாம். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி நாளில் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்கள் கூட்டம் இல்லை என வங்கி அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே சென்னையை பொறுத்தமட்டில் 80 சதவீதத்துக்கும் அதிகமான ஏ.டி.எம். எந்திரங்கள் பணம் இல்லாமல் மூடியே கிடக்கின்றன. இதனால் வங்கி கணக்கில் போதுமான அளவு பணம் இருந்தும் எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு அறிவித்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் இனியாவது இயல்பு நிலைக்கு திரும்புமா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே சமயம் புதிய ஆண்டின் தொடக்கத்தில் பணத்தை எடுப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.