தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெருகி வரும் கருப்பு பணத்தை முடக்கும் வகையில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ந் தேதி அறிவித்தது.
இதையடுத்து, கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.
அதேபோல தமிழக அரசின் பல காண்டிராக்டுகளை எடுத்து நடத்துபவரும் தொழில் அதிபருமான சேகர் ரெட்டியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.131 கோடி ரொக்கம், 171 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை அதிகப்படுத்தியது.
சேகர்ரெட்டிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும், எனவே சேகர் ரெட்டியின் மோசடியில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்றும் புகார் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சோதனை தமிழகத்தில் பெரும் பரபரப்பு சம்பவமாக அமைந்தது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனைக்கு எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
# முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது பாதுகாப்புக்கு துணை ராணுவத்தை மட்டும் அழைத்துச்சென்றது தவறு.
# தலைமை செயலகத்தில் சோதனை செய்யும் முன் மாநில அரசின் அனுமதி பெறுவது மரபு.
# தலைமைச்செயலகத்தில் நடந்த சோதனை கூட்டாட்சி தத்துவம் மீது கேள்வி எழுகிறது.
# வருமான வரி சோதனைக்கு துணை ராணுவம் அனுப்பியது கடும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.