புதுடெல்லி விமான நிலையத்தில் நேருக்குநேர் வந்த இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக கடந்த சிலநாட்களாக ரெயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடும் பனிமூட்டம் காரணமாக தொடர் சாலை விபத்துகளும் நேரிட்டு வருகிறது, விமானங்கள் மற்றும் ரெயில் சேவையானது ரத்து செய்வதும், மாற்றியமைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இரு விமானங்கள் நேருக்கு நேர் வந்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரு விமானங்கள் நேருக்கு நேர் மிகவும் நெருக்கமாக வந்ததன் காரணமாக அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரிதும் அச்சம் அடைந்தனர். லக்னோவில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் 176 பயணிகள் இருந்தனர். விமான ஓட்டிகள் ஸ்பைஸ்ஜெட் விமானத்தை பார்த்ததும் உடனடியாக முழு திறனையும் பயன்படுத்தி விமானத்தை நிறுத்திஉள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இண்டிகோ விமானம் 6இ 769 விளக்கை அணைத்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்ல இருந்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி விமான நிலையத்தில் இரு விமானங்களும் நேருக்கு நேர் நிற்கும் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.