அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் அமைப்புகள் சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா தேர்வு
அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்பதற்கு சசிகலாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்த கட்சி, ஜெயலலிதா உயிரை கொடுத்து வளர்த்த கட்சிக்கு புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்க உள்ள சசிகலா நடராஜனுக்கு வாழ்த்துக்கள் ’’ என்று கூறியுள்ளார்.
சரத்குமார்–ஏ.சி.சண்முகம்
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நேரிடையாக இல்லை எனினும், அவருடைய 33 வருட அரசியல் பயணம் அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதாவை இழந்து தவிக்கின்ற இந்த இயக்கத்தை மிகச்சிறப்பான முறையில் வழி நடத்திச்செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரை தேர்ந்தெடுத்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ஜெயலலிதா உடன் 33 ஆண்டுகாலம் அவரை விட்டு பிரியாது, அவர் விருப்பங்களை அறிந்து செயல்பட்டவர் சசிகலா. பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மேலும் புகழ் சேர்க்கும்படி, இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்தி செல்ல வாழ்த்துகிறேன் ’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எர்ணாவூர் நாராயணன்
இதேபோல மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் ந.சேதுராமன், அகில இந்திய மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் ஏ.அஸ்மத்துல்லா, இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன்,
இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், முஸ்லிம் மக்கள் கழகத்தின் தலைவர் ஏ.கே.தாஜூதின், பசும்பொன் மக்கள் கழக நிறுவன தலைவர் ச.இசக்கிமுத்து, சென்னைவாழ் பிரமலைக் கள்ளர் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் ஈகை வி.செல்வம் ஆகியோரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.