December 27, 2016
இந்தியர்களில் 95 கோடி பேருக்கு இணைய பயன்பாடு இல்லை
இந்தியாவில் சுமார் 95 கோடி மக்களுக்கு இணைய வசதி சென்றடையவில்லை என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அசோசெம் மற்றும் டெலோயிட்டி அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இணைய பயன்பாடு ஊடுருவியுள்ள நிலையில், பல்வேறு இணைய சேவை நிறுவனங்கள் புதுப்புது சலுகைகளை வழங்கியும் இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உள்ளதாக இந்த ஆய்வு கூறியுள்ளது.
மத்தியில் ஆட்சி புரியும் பா.ஜ.க தலைமையிலான அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்துவிதமான செயல்பாட்டிலும் இணைய வசதியை புகட்டி வருகிறது. இருப்பினும், உலகளவில் சராசரியாக 50% மக்களில் 2.3% பேருக்கு டிஜிட்டல் அறிவு தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப தலைவர்களின் கூட்டு முயற்சியில் திறன் இந்தியா எனும் பயிற்சியின் கீழ் இணைய சேவை சென்றடைய வழிவகை செய்யலாம் என்று இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.
உலகின் 2 வது பெரிய இணைய பயன்பாட்டளர்களை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவில், தற்போது சுமார் 35 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இணையம் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது.
இந்தியர்களில் 95 கோடி பேருக்கு இணைய பயன்பாடு இல்லை
Reviewed by மறத்தமிழன்
on
December 27, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.