Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 14, 2016

மகளின் திருமணத்திற்காக 90 ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்து மகிழ்ந்த தந்தை!


மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு 90 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளது பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரைச் சேர்ந்த அஜய் முனோட் என்கிற தொழில் அதிபரின் மகள் ஷ்ரேயாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியை ஏழைகளுக்கு நன்மைகள் செய்து வெளிப்படுத்த நினைத்தார்  அஜய் முனோட். தனது மகளின் திருமணப் பரிசாக வீடற்ற 90 ஏழைகளுக்கு வீடுகட்டிக்கொடுக்க திட்டமிட்ட அவர் அதனை செயல்படுத்தி மகிழ்ந்துள்ளார்.

மொத்தம் ஒன்றரை கோடி ரூபாயை இதற்காக ஒதுக்கி வீடுகளை கட்டிய அஜய் முனோட் அந்த வீடுகளில் 90 ஏழை குடும்பங்களை குடியேறச் செய்துள்ளார். குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள், போதை பழக்கத்திற்கு அடிமையாகாதவர்கள் என பயனாளிகளை தான் கவனமுடன் தேர்ந்தெடுத்ததாக கூறினார் அஜய் முனோட்.

திருமணக் கொண்டாட்டங்கள் ஆடம்பரங்களின் அணிவகுப்புகளாக மாறிவரும் சூழலில் அதிலும் சமூக அக்கறையை  வெளிப்படுத்திய அஜய் முனோட்டின் செயல் பொதுமக்களிடையே பெரிது பாராட்டப்பட்டு வருகிறது.⁠⁠

வாட்ஸ் அப்  பதிவு

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.