Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8-ஆக அதிகரிப்பு!



விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
நாராணபுரத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரில், சூரிய நாராயணசாமி என்பவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை  4ஆக அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று காலை மாமுனிராஜ், வீரலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். கவலைக்கிடமாக இருந்த முத்துமாரி, செல்வராஜ் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியோனார் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்களும், சிஐடியு தொழிற்சங்கத்தினரும், உடல்களை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, மருத்துவமனையையும் முற்றுகையிட்டனர்.
4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஆலை நிர்வாகம் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.