December 14, 2016
நைஜீரியாவில் 80 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் பலியாகும் அபாயம்
நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் உள்ளிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக ‘போர்னோ’ மாகாணம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவின்றி தவிக்கின்றனர்.
கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறும் தீவிரவாதிகளின் தாக்குதலால் 26 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். உணவில்லாததால் 4 லட்சம் குழந்தைகள் பசி பட்டினியால் தவிக்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் இவர்களுக்கு சர்வதேச நாடுகள் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை உதவிகள் வழங்காவிடில் 5-ல் ஒரு பங்கு குழந்தைகள் உயிரிழக்கும். அதாவது 80 ஆயிரம் குழந்தைகள் பலியாகும் அபாயம் உள்ளது. இத்தகவலை ஐ.நா.வின் யூனிசெப் செயல் இயக்குனர் அந்தோனி லேக் தெரிவித்துள்ளார்.
எனவே தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பசி பட்டினியால் தவிக்கும் குழந்தைகளுக்கு மனிதாபிதமான உதவிகள் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் ஐ.நா.வும், சர்வதேச தனியார் நிறுவனங்களும் நன்கொடை பெறுவதற்காக மிகவும் திரித்து கூறுவதாக நைஜீரிய அதிபர் முகமது புகாரி குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்பே போகோஹராம் தீவிரவாதிகள் தோற்கடித்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நைஜீரியாவும், அண்டை நாடுகளும் அவர்கள் கைப்பற்றிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து விரட்டியடித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நைஜீரியாவில் 80 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் பலியாகும் அபாயம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.