Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 8, 2016

போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர்ரெட்டி வீட்டில் ரூ70 கோடி ரூ2000 நோட்டுகள், 100கி.தங்கம் சிக்கியது


சென்னையில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் ஐடி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர் . இச்சோதனையில் ரூ70 கோடி ரூ2000 நோட்டுகள், 100 கிலோ தங்கம் சிக்கியது.

போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பிடிபட்டது. இதில் ரூ70 கோடி ரூ2,000 நோட்டுகளும் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ70 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளும் பிடிபட்டன.

வேலூர் பூர்வீகம்
இந்த சேகர் ரெட்டியின் பூர்வீகம் வேலூர் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி கிராமம். தொடக்கத்தில் சென்னையில் ரயில்வே கான்டிராக்ட் பணிகளை செய்து வந்தார் சேகர் ரெட்டி.

அதிமுக உறுப்பினர்..
பின்னர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மேம்பாட்டு நிதியின் கீழான கான்டிராக்ட்டுகளைப் பெறத் தொடங்கினார் சேகர் ரெட்டி. அத்துடன் 1998-ம் ஆண்டு அதிமுகவின் உறுப்பினரானார்.

லஞ்சமாக திருப்பதி பிரசாதம்
திருப்பதி கோவில் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்தவர் ரெட்டி. இதனால் திருப்பதி கோவில் பிரசாதத்துடன் சென்னையில் விவிஐபிக்களை சேகர் ரெட்டி சந்தித்து நட்பாக்கிக் கொண்டார்.

போயஸ் கார்டன்
 டாக்டர் விஜயபாஸ்கர் மூலமாக சசிகலா குடும்பத்தின் டாக்டர் வெங்கடேஷூடன் அறிமுகமானார் சேகர் ரெட்டி. இதைத் தொடர்ந்து போயஸ் கார்டனுக்கும் நெருக்கமானார் ரெட்டி. கடந்த ஆண்டு அதிமுகவின் புதிய கஜானா என்று ஜூனியர் விகடன் வார இதழ் சேகர் ரெட்டியை குறிப்பிட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.