Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 21, 2016

குடும்ப அட்டையில் மேலும் 6 மாதத்துக்கு உள்தாள் ஒட்ட தமிழக அரசு முடிவு!



ஆதார் அட்டை இணைக்கும் பணி முழுமையாக நிறைவடையாததால், வரும் 2017ம் ஆண்டு குடும்ப அட்டையில் 6 மாதத்துக்கு உள்தாள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டைக்குப் பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள் 320 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. ஆதார் எண் இணைக்கும் பணி முழுமை பெறதாதால் குடும்ப அட்டையில் அடுத்த 6 மாதங்களுக்கு உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 47 சதவீத குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் பெறப்பட்டுள்ளதாகவும், எனினும் மீதமுள்ள குடும்பங்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை அடையாததால், ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர சில காலம் ஆகும் என்றும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் 2017ஆம் ஆண்டில் குடும்ப அட்டையில் முதல் ஆறு மாதங்களுக்கு உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.