முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை வழி நடத்துவது யார் என்ற விவாதம் பரவலாக ஆரம்பித்துள்ளது.
சின்னம்மா என அறியப்படும் சசிகலா தான் வர வேண்டு என கட்சியின் முன்னணி தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சிலர் தீபாதான் சின்னம்மா எனவும் அவர்தான் தலைமையை ஏற்கவேண்டும் எனவும் கூறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த தீபா ஜெயலலிதாவுடன் தான் இருந்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
அதில், 1997-ஆம் ஆண்டு அத்தை ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது நேரில் சென்று பார்க்க போனபோது வெளிப்படையாக பிரச்சனை குறித்து பேசினேன். அப்போது நீ குழந்தை உனக்கு ஒன்றும் தெரியாது. நீ வீட்டுக்கு போ நான் வெளியே வந்ததும் பார்க்கிறேன் என கண்டித்து அனுப்பினார்.
அதன் பின்னர் பலமுறை அவரை பார்க்க முயற்சித்தேன் ஆனால் காவலர்களால் துரத்தப்பட்டேன்.
தான் கடைசியாக 2002-ஆம் ஆண்டு அத்தை ஜெயலலிதாவை இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற போதுதான் மீண்டும் சந்திக்க முடிந்ததாக கூறினார். அப்போது பல விஷயங்களை அவருடன் பேசினேன். தந்தை குறித்து பேசினேன்.
எங்கள் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் கூடயெல்லாம் நடந்தது. எங்களை அவர்கள் வளர்த்த விதத்தையெல்லாம் கூறி அத்தையிடம் சண்டையிட்டேன்.
என்னை சமாதானப்படுத்துவதற்காக என்னுடன் 6 மணி நேரம் செலவழித்தார். பின்னர் வீட்டுக்கு போ நான் பின்னர் வந்து உன்னை பார்க்கிறேன் என்றார். அதுதான் அவரை நான் கடைசியாக பார்த்தது என கூறியுள்ளார் தீபா.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.