Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

திமுக வழக்கு போட்ட ரூ.65000 கோடி சொத்து எனக்குத் தான்..! சசிகலாவுடன் மோதும் சின்ன எம்.ஜி.ஆா்…!?


 
சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன் சுதாகரன். சசிகலாவுக்கு வாரிசு இல்லை. இதனால் அவா் அக்காவின் மகன்களை தன் பிள்ளைகளாக பார்த்தார்.
அதுவும் சுதாகரன் மீது சசிகலாவுக்கு பாசம் அதிகம். இந்த பாசம்தான் ஜெயலலிதா தத்து எடுக்க காரணமாக இருந்தது.
வளா்ப்பு மகனாக இருந்த சுதாகரனுக்கு சிவாஜியின் பேத்தியை திருமணம் செய்து வைத்தனா்.
இந்த திருமணத்தை பார்த்த இந்தியாவே வாயை பிளந்தது. இந்த திருமணம்தான் ஜெயலலிதா ஜெயிலுக்கு போகவும் காரணமாக பின்னாளில் அமைந்தது.
அன்றே, தவறு என்று உணா்ந்த ஜெயலலிதா கார்டனை விட்டு  சுதாகரனை விரட்டி அடித்தார்.
ஜெயலலிதாவிடம் இருந்து அபேஸ் செய்த பணத்தை வைத்து சுதாகரன் சின்ன எம்.ஜி.ஆா் என்ற அடைமொழியுடன் செல்வ செழிப்புடன் தமிழகத்தை சுற்றி வந்தார்.
ஆட்சி மாறியதும் 2001ம் ஆண்டு ஜெயலலிதாவே சுதாகரனின் தி.நகர் வீட்டிலும் அபிராமபுரத்தில் உள்ள அலுவலத்தில் அதிரடியாக சோதனை நடத்த உத்தரவிட்டாா்.
அப்போது அங்கு  போலீஸ் 88 கிராம் ஹெராயினைப்  போலீசாா் பறிமுதல் செய்து கைது செய்தனா்.
சுதாகரன் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தாகவும் வழக்கு கடுமையாக்கப்பட்டது. 108 நாட்கள் சிறையில் இருந்தார் சுதாகரன். இந்த வழக்கு இன்றும் நடைபெற்றுதான் வருகிறது.
வருமானத்துக்கு அதிகமா சொத்து சோ்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா இளவரசி உடன் சுதாகரனும் குற்றவாளியாக சோ்க்கப்பட்டு 20 வருடங்கள் வழக்கு நடந்தது.
இதில் அன்று 66.65 கோடி என்று மதிப்பிட்ட சொத்து. இன்று 65000 கோடிக்கு சமமாகும். ஜெயலலிதா இறந்துவிட்டதால் அந்த வழக்கை  சுப்ரீம் கோர்ட்  தள்ளுபடி செய்தது.
இப்போதுதான் சின்ன எம்.ஜி.ஆா். என்றழைக்கப்படும் சுதாகரன் அதிமுகவில் என்ட்ரி கொடுக்க தயாராகிவிட்டாா்.
அதிமுகவையே முழுவதுமாக ஆட்டைய போட்டுட்டீங்க சின்னம்மா. பிரச்சனைக்கு உரிய சொத்தையாவது எனக்கு தாருங்கள் என்று கேட்டு வருகிறாா்.
அந்த சொத்தால் நான் ஜெயிலுக்கு போய் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். அது எனக்குதான்  வேண்டும் என்று சசிகலாவை மிரட்டியும் வருகிறாராம்.
இதனால், சின்ன எம்.ஜி.ஆருக்கும், சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இன்னும் சில தினங்களில் இது வெடிக்கலாம் என்றும் அ.தி.மு.கவின் உள்வட்டாரங்கள் கூறியதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.