Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 25, 2016

அதானி குழுமத்திற்கு ரூ.6,153 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு விஜயகாந்த் கண்டனம்


ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் நிறுவனம் தொடங்கும் அதானி குழுமத்திற்கு  பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு மத்திய அரசு முன் வந்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதானி குழுமத்திற்கு ஸ்டேட் வங்கி ரூ.6,153 கோடி கடன் தரவுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் 4000 தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். அந்நாட்டின் மிக பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனம் நஷ்டம் காரணமாக 8000 ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளது என்று விஜயகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழிநிலையில் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க தொழில் முதலீடாக போடுவதற்கு தனி நபரான அதானியை நம்பி ஒரு பில்லியன் டாலர் பணத்தை வங்கி கடனாக கொடுப்பது அறிவுடைமையா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வங்கி பணத்தை இந்திய நிலக்கரி சுரங்கங்களில் முதலீடு செய்து உள்நாட்டு உற்பத்தியும் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசை விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.