Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி ஊரில் ஒரு ரேசன் கார்டுக்கு ரூ. 60000 விநியோகம்



வேலூர்: பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்குப் பின்னர், கறுப்பு பணம், கள்ள நோட்டு பதுக்குபவர்களை வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது 132 கோடி ரூபாய்,177 கிலோ தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. புதிய ரூபாய் நோட்டுக்களாக 35 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை புதிய ரூபாய் நோட்டுக்களாக சேகர் ரெட்டி எப்படி மாற்றினார் என்பது பற்றி 50 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சேகர் ரெட்டியின் சொந்த ஊரான காட்பாடியை அடுத்த தொண்டான்துளசியில், கிராம மக்களுக்கு ஒரு ரேசன்கார்டுக்கு தலா.ரூ.60 ஆயிரம் ரூபாய், 1200 பேருக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது கொடுக்கப்பட்டுள்ள பணத்தை வட்டியில்லாமல் 4 தவணைகளாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.