December 27, 2016
50 நாட்களில் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது - வெங்கையா நாயுடு ! "பூனை குட்டி வெளியே வர பார்க்கிறது!!"
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்பது 50 நாட்களில் நிறைவேறாது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8 ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இதனிடையே மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் செபாசிட் செய்து வருகின்றனர். இருப்பினும் பணத்தட்டுப்பாட்டினால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு நிலைமை 50 நாட்களுக்குள் சீரடையும் என்றார். ஆனால், இன்னும் நிலைமை சீராகவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்பது 50 நாட்களில் நிறைவேறாது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறுகையில், பணமதிப்பிழப்பு விவகாரத்திற்கு எதிர்புகள் அதிகம் உள்ளதால் வெகு விரைவில் நிலமை சீராகும். கருப்புப்பண ஒழிப்புக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையை அடையும் என்றார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெங்கையா நாயுடு, வருமான வரித்துறை சோதனையில் எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லை. மத்திய அரசுக்கும் இந்த சோதனைக்கும் சம்பந்தம் இல்லை எனவும் கூறினார். மேலும், வருமான வரித்துறை சோதனை சரியான முறையில் தான் நடத்தப்பட்டிருக்கிறது. வருமான வரித்துறை சோதனை தொடர்பாக ராகுல் காந்தி ஆதாயம் தேடுவதாகவும், ராமமோகன ராவ் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்புவதாகவும் வெங்கையா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
50 நாட்களில் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது - வெங்கையா நாயுடு ! "பூனை குட்டி வெளியே வர பார்க்கிறது!!"
Reviewed by மறத்தமிழன்
on
December 27, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.