December 28, 2016
அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பா கணவர் உள்பட 50 பேர் மீது வழக்குபதிவு !
அதிமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர திலகர் உள்பட 50 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பா கணவர் உள்பட 50 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் கூடுகிறது. இப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுத்தாக வேண்டும் என தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கு சசிகலா புஷ்பா வரப்போவதாக இன்று தகவல் வெளியானது.
இதையடுத்து சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரும், அவரது கணவர் லிங்கேஸ்வரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் வந்தார். அப்போது தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சசிகலா புஷ்பாவின் கணவரும் தாக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பா கணவர் உள்பட 50 பேர் மீது ராயப்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
அதிமுக பிரமுகர் சிந்துரவி என்பவர் அளித்த புகாரின் பேரில் சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர திலகர் உள்பட 50 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பா கணவர் உள்பட 50 பேர் மீது வழக்குபதிவு !
Reviewed by மறத்தமிழன்
on
December 28, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.