Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

50 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது டி.எஸ்.பி. பிடிபட்டார்!


50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டி.எஸ்.பியை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலிசார்கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் காவல் அலுவலகம் சத்துவாச்சாரியில் உள்ளது. இந்த வளாகத்தின் தரைதளத்தில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகின்றது.

இப்பிரிவுக்கு உஸ்மான் அலிகான் என்பவர் டி .எஸ். பி. யாக உள்ளார்.எஸ்.பி. அலுவலகத்தில் அளிக்கப்படும் நிலம் அபகரிப்பு தொடர்பான புகார்களை உஸ்மான் அலிகான் டி .எஸ்.பிக்கு பரிந்துரை செய்வது அலுவல் வழக்கம்.

அப்படி பரிந்துரை செய்யப்படுகின்ற புகார் மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க முதலில் ரேட் பேசுவாராம்.அவர் மீது பல்வேறு புகார்கள் உயர் அதிகாரிகளுக்கும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் சென்றது.

அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி பாலசுப்பிரமணி தலைமை யிலான குழு அவரை கண்காணித்த போது 50 ஆயிரம் லஞ்சம் பெற்றார். அப்போது டி.எஸ்.பி. உஸ்மான் அலிகான் கையும் களவுமாக பிடிபட்டார்.

மாவட்ட காவல் அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ள நிலையில் இந்த கைது மற்ற அதிகாரிகளை கலக்கம் அடைய செய்திருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.