December 18, 2016
50 பேர் குவிக்கப்பட்டனர்! செருப்பு வீச ஸ்டாலின் தான் காரணம்! வைகோ மறைமுக தாக்கு!
திமுக தலைவர் கருணாநிதியை காணச் சென்ற வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கார் மீது திமுகவினர் செருப்பு மற்றும் கற்களை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மு.க.ஸ்டாலின் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். திமுக முன்னோடி மறைந்த கோ.சி.மணி படத்திறப்பு விழாவிற்கு ஸ்டாலின் சென்றதை சுட்டிக்காட்டிய அவர், ஆங்கில பழமொழி ஒன்றை சுட்டிக்காட்டி தன் கார் மீதான தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலினே காரணம் என மறைமுகமாக குற்றம்சாட்டினார். செங்கற்கட்டிகள், செருப்புகள், சிறிய கம்புகள் கார் மீது வந்து விழுந்ததாக வைகோ தெரிவித்தார். தான் வருவது முன்கூட்டியே தெரியும் என்றும் தன்னை வாசலில் வந்து வரவேற்காமல் இப்படி செய்துவிட்டனர் என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.
தான் வருவது தெரிந்து 50 பேர் உடனடியாக குவிக்கப்பட்டதாகவும், கருணாநிதி குடும்பத்தில் மற்றவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும் வைகோ குறிப்பிட்டார்.
50 பேர் குவிக்கப்பட்டனர்! செருப்பு வீச ஸ்டாலின் தான் காரணம்! வைகோ மறைமுக தாக்கு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 18, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.