Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

இனி ரூ.5,000 வரை மட்டுமே டெபாசிட்..! ரிசர்வ் வங்கி புது அதிரடி!!


 
ரூ.500 மற்றும் ரூ.1,000 பழை நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி அதிரடியாக அறிவித்தார். இதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுக்களை வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பல லட்சம் கோடிகள் பழைய ரூபாய்நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுக்களை எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்துகொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதனையடுத்து, ஏழைகளின் ஜன்தன் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்து கருப்பு பண முதலைகள் ஏமாற்றி வந்தனர்.
இந்நிலையில், பழைய நோட்டுக்கள் டெபாசிட் செய்ய, வரும் 30ம் தேதிவரை கால அவகாசம் ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
ரூ. 500 மற்றும் ரூ.1,000 பழைய நோட்டுகளை ஒரு வங்கி கணக்கில், ஒரு முறை அதுவும் அதிகபட்சமாக ரூ.5,000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இந்த நடைமுறை டிசம்பர் 30ம் தேதி வரை மட்டுமே என ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.