December 29, 2016
மத்திய மோடி அரசின் திடீர் பல்டி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறைத் தண்டனை கிடையாது
மார்ச் 31-ம் தேதிக்கு பின்னர் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறைத் தண்டனை கிடையாது என மத்திய அரசு அவசர சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து உள்ளது.
பிரதமர் மோடி கடந்த மாதம் 8–ந் தேதி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், புதிதாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகணக்கில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்வதற்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
நாட்டில் ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் இதுவரை ரூ.14 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. கால அவகாசம் முடிந்த பிறகும் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் அவற்றை, ஜனவரி 1–ந் தேதி முதல் மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், தொலைதூர பகுதிகளில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை இவ்வாறு கொடுத்து மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அப்போது அந்த ரூபாய் நோட்டுகளை தாமதமாக மாற்றுவதற்கான காரணத்தையும் அவர்கள் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுளை வைத்து இருப்பது குற்றமாக கருதப்படும். இதுதொடர்பாக மத்திய அரசு, ‘குறிப்பிட்ட வங்கி ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு அவசர சட்டம்’ என்ற புதிய அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த அவசர சட்டத்தில்
* ஜனவரி 1–ந் தேதி முதல் மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கி கிளையில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றும் போது தவறான தகவல்கள் தெரிவித்தால், அவர்களுக்கு ரூ.5,000 அல்லது அவர்கள் டெபாசிட் செய்யும் பணத்தைப் போன்று 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.
* செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அதிகபட்சமாக 10 நோட்டுகள் வரை ஒருவர் வைத்துக் கொள்ளலாம்.
* மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு அதற்கு அதிகமாக யாராவது பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால், அது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.
* அப்படி யாராவது வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அல்லது வைத்து இருக்கும் தொகையைப் போல் 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.
* சில சந்தர்ப்பங்களில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்ற அம்சமானது விமர்சனங்களை எதிர்க்கொண்டது.
சிறைத் தண்டனை கிடையாது
இந்நிலையில் மார்ச் 31-ம் தேதிக்கு பின்னர் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறைத் தண்டனை கிடையாது என மத்திய அரசு அவசரச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து உள்ளது. ஆனால் மார்ச் 31-ம் தேதிக்கு பின்னர் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அவரது ஒப்புதல் கிடைத்ததும் அவரச சட்டம் அமலுக்கு வரும். பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய நாளையே கடைசி நாளாகும்.
மத்திய மோடி அரசின் திடீர் பல்டி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறைத் தண்டனை கிடையாது
Reviewed by மறத்தமிழன்
on
December 29, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.