Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 25, 2016

வங்கி, ஏடிஎம்களில் பணம் இல்லை: 47வது நாளாக தொடரும் சோகம்


மூடப்பட்ட வங்கி ஏடிஎம்களால் பொதுமக்கள் செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். அதைதொடர்ந்து வங்கிகள் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு இணையான புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படாததால் நாட்டில் பணப்புழக்கம் குறைந்து மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது. அதனால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.

பெரு விற்பனை நிலையங்கள் பாயின்ட் ஆப் சேல் என்று சொல்லப்படும் ஸ்வைப்பிங் மிஷின்களை வைத்திருந்ததால் அவர்களின் வியாபாரம் முற்றிலும் முடங்கவில்லை. ஆனால் சிறு வியாபாரிகளின் வியாபாரம் முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அவ்வப்போது புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை பீதியில் ஆழ்த்துகின்றனர். பிரதமர் மோடி 50 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். அந்த 50 நாட்கள் முடிவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. இந்நிலையில் புத்தாண்டில் மோடி என்ன அறிவிக்கப்போகிறார் என்றும் மக்கள் பீதியில் உள்ளனர்.

படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகம் உள்ள நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை  என்பது எந்த விதத்தில் சாத்தியம். நம் நாட்டில் எல்லோருக்கும் செல்போன்  வழி பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்நிலையில் நேற்று மாதத்தின் 4வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று முன்தினம் ஏடிஎம் மையங்களில் நிரப்பப்பட்ட பணம் நேற்று காலையிலேயே தீர்ந்து போனது. இதனால் பணம் எடுப்பதற்காக ஏடிஎம்களை தேடி புறப்பட்டவர்கள் வெறுத்துப்போய் வீடு திரும்பினர். வங்கிகளில் வரிசையில் நின்று பணம் எடுப்பதற்கு கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் தியேட்டர்கள் மால்களுக்கு சென்று வர, இறைச்சி உள்ளிட்ட உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிட கையில் பணம் இல்லாமல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

பணமில்லாத கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ், புத்தாண்டு இரு பண்டிகைகளுமே கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பிரதான பண்டிகைகள். இந்நிலையில் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் புத்தாடை, பரிசு பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வியாபாரம் மந்தம் என வியாபாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.