Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 27, 2016

குஜராத் திருமண நிகழ்ச்சியில் பெண் பாடகர் மீது 40 லட்சம் பண மழை, பொதுமக்கள் கொந்தளிப்பு - வைரலாக பரவும் காணொளி


குஜராத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பெண் பாடகர் மீது 40 லட்சம் ரூபாயை பண மழையாக பொழிந்துள்ளனர். அதன் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது அனைத்தும் 10 மற்றும் 20 ரூபாய்கள் நோட்டுக்கள்.

சில்லரைக்காகவும் பணத்திற்காககவும் மக்கள் நாடு முழுவதும் திண்டாடிக் கொண்டிருக்கையில் குஜராத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணம் இருந்தும் எடுக்க முடியாமல் ஒரு புறம் மக்கள் அல்லல் படுகின்றனர். மறு புறம் பெண் மீது பண மழை லட்சக்கணக்கில் பொழியப்படுகின்றது. என்ன சிஸ்டம் ? பணக்காரன் சந்தோசத்தில் திழைப்பதும் ஏழைகள் திண்டாடி சாவதும் தான் இந்த நாட்டின் எழுதப்படாத சட்டமா என செல்லாக்காசு விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பி கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

மேலும் தமிழகம் மட்டும் தான் மோடி அரசின் கண்ணிற்கு தெரியுமா தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடக்கும் இது போன்றவைகள் அவரின் கண்ணுக்கு தெரியாதா அங்கு ஏன் எந்த ரைடயும் காணவில்லை , இவர்களுக்கு எப்படி இத்தனை லட்சம் ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தது ? என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.