Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 24, 2016

இறந்துவிட்டதாக பெண்ணுக்கு இறுதிச்சடங்கு! 40 வருடங்களுக்கு பிறகு உயிருடன் வந்த அதிசயம்!!


சினிமாவையும் மிஞ்சும் விதமாக அதிசயிக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. கடந்த 40 வருடமாக இறந்து விட்டதாக நினைத்த பெண் ஒருவர் தற்போது தன் இரண்டு மகள்களுடன் சேர்ந்துள்ளார்.

பித்னூ கிராமத்தை சேர்ந்த விலாசா (82) எனும் பெண் 1976ஆம் ஆண்டு வயல் பகுதியில் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க சென்ற போது கருநாகம் தீண்டி மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பல்வேறு சிகிச்சை அளித்தும் அசைவற்று கிடந்ததால் விலாசா இறந்தவிட்டதாக எண்ணி அவரது குடும்பத்தினர் கங்கைக்கரையில் இறுதிச்சடங்கை செய்து தண்ணீரில் மிதக்கவிட்டுள்ளனர். அங்கிருந்து மிதந்து சென்ற அவருடையை உடல் கன்னாஜ் மாவட்டத்தை அடுத்த சிறு கிராமத்தில் கரை ஒதுங்கவே அங்குள்ள படகோட்டி ஒருவர் பக்கத்து கிராமத்திற்கு கொண்டு சென்று அப்பெண்ணிற்கு சிகிச்சை அளித்துள்ளார். பழைய நினைவுகள் ஏதுமின்றி வாழ்ந்து வந்த விலாசாவிற்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு பழைய ஞாபகங்கள் வந்துள்ளன.

இதனையடுத்து தான் வசித்து வந்த வீட்டில் உள்ளவர்களிடம் பழைய நினைவுகளை கூறியதை அடுத்து தற்போது தனது இரண்டு மகள்களுடன் 40 வருடங்களுக்கு பிறகு விலாசா இணைந்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.